google-site-verification=XFNOzj_g0WWjXvhrqhcsjWct2BIvP0sCaK-Tk7O14os Poetry-Tamil/English: சிந்திக்க சில நிமிடம்.......

6/16/19

சிந்திக்க சில நிமிடம்.......


பிறரை குறை  கூறுகிறோமே, 
 நாம் நிறைவானவர்கள்
என்று அர்த்தமா?

பிறரை குற்றப்படுத்துகிறோமே,
 நாம் குற்றமற்றவர்கள் 
என்று அர்த்தமா?

பிறரை அற்பமாக எண்ணுகிறோமே,
 நாம் உயர்வானவர்கள் 
என்று அர்த்தமா?

பிறர் மனதை காயப்படுத்துகிறோமே, 
 நம் மனம் காயமற்றது 
என்று அர்த்தமா?

பிறரை அழகற்றவர்கள் என்கிறோமே,
 நாம் அழகானவர்கள் 
என்று அர்த்தமா?

பிறரை அவமானப் படுத்துகிறோமே,
 நாம் அவமானப்பட மாட்டோம் 
என்று அர்த்தமா?

பிறரை முட்டாள்களாக தீர்க்கிறோமே,
 நாம்  அறிவாளிகள் 
என்று அர்த்தமா?

இத்தனை கேள்விகளுக்கும் 
ஆம் என்போமா? 
இல்லையென்போமா?

நம்மை கொஞ்சம் ஆராய்ந்து
 பார்த்தால், மிக அருமையான
   விடை கிடைக்கும்.

சிந்திப்போமா? 

No comments:

Post a Comment

comment post plus and minus