9/19/18

அவள்.........


பிஞ்சு விரல்களின் தொடுதலில்
அஞ்சி வைத்திடும் பாதங்களில்
பிஞ்சு முகத்தின் புன் சிரிப்பில்
கெஞ்சி அழும் பார்வையிலும்
மயங்கி நின்றேன் நான்.

விரும்பிச் செய்யும் குறும்புகளில்
அரும்பு மொழியின் அசைவுகளில்
 கரும்பு பேச்சு கவிதைகளில் 
சுருங்கிவிரியும் விழி அசைவில் 
நெகிழ்ந்து போனேன் நான்.

தத்தி நடந்து வரும் அழகாலும்
வாய் பொத்தி சிரிக்கும் செயலாலும்
 முத்த மழை பொழிந்திடும் மொழியாலும்
மெத்தப் படித்தவள் என்ற பாவனையிலும்
மெய் மறந்து போனேன் நான்.

அகமகிழ்ந்து அவள் சிரிக்க
சிரம் நிமிர்ந்து நான் நடக்க
என் கரம் பிடித்து சிரிப்புதிர்த்து
உடன் நடக்கும் தோழியாக உயர்ந்த
 உறவு ஆனாள் அவள் எனக்கு.

அவள் என் தாயாக
நான் அவள் சேயாக, மார்பில் 
அணைத்து இருந்தாலும் 
அவளின் தோள் சாயும்
சுகம் இருக்கும் எனக்கு.

என் அருமை மகள்
அருகிருக்க, மற்ற
பெருமையெல்லாம்
வீண் எனக்கு.