7/18/18

எனது ஆதங்கம்.........!?

வீசும் தென்றலில் ‌ 
    பயிர் துடித்து
அழகு கண்ட பூமியில்
    இன்று வீறும் ஆயுதத்தால்
    உயிர் துடிக்கக்  கண்டோம் 

 அன்று மண்ணை கீறி 
    பொன் விதைத்தோம் 
            இன்றோ, 
    எண்ணங்களை கீறி 
இரத்தத்தை 
       விதைக்கிறோம் 

மனங்களை  
    ஆண்டோம் அன்று 
பிணங்களை  
    ஆள்கிறோம் இன்று.

வினைகளை விதைத்து,
    விளைந்த  கண்ணீரில்
பாதி மூழ்கிவிட்ட,
     இந்த 'பார்' 
என்னும் கப்பல்...!?

காப்பாற்ற 
    யாருமின்றி
கணிசமாய் 
    தள்ளாடுகிறது..!

No comments:

Post a Comment

comment post plus and minus