7/31/18

கோடைக்கானல் எனும் குளிர் மகள்.!




கோடையிலும் 
  குளிர்ச்சி தரும்,
மலைகளின் 
  இளவரசி
மயக்குகிறாள். 

பச்சைப்புல் 
 போர்த்தி, 
பவளமாய்
 பனிதாங்கி, 







வெள்ளியருவி 
   கொண்டு, 
விளையாடி 
  மகிழ்கிறாள். 

 வானம்
  தொட்டு , 
வண்ண
  நிலவை
துணைக்
கழைத்து, 

வளைந்த 
 சிகரங்களில் 
 வழி நடத்திச் 
 செல்கிறாள்.









செம்பவளக் 
   கனி நிறைந்து, 
செம்மரங்கள் 
  செழிப்பாய் 
தலையாட்ட,

செருக்காக 
  சிரம் 
தூக்கி 
  சிரிக்கிறாள். 


 வகைபூக்கள் 

   வண்ணச் 
 சித்திரம் தீட்டி 
   வளம் சேர்க்க,
 வட்டுடையாள்

வண்டுக் 
கண்ணடித்து,
   காதல் 
 மொழிபேசி,

கலக்குகிறாள்.



No comments:

Post a Comment

comment post plus and minus