7/31/18

முரண்பாடுகள்......!?


உயிர் 
வளர்க்கும்
பயிர்கள் 
மத்தியில்,
உடம்பெரிக்கும்
மேடை.

ஆறுகளின்
வழித்தடத்தில்,
அழிவுக்கேற்ற
அமிலத் 
தண்ணீர்.

உயர்ந்த 
மனிதன்
கோபுரத்தில்
உயர்த்திய 
குடிமகன்
வீதியோரத்தில் .

பெற்றவள் 
இருப்பது
ஓலைக்குடிசை.
பிள்ளை 
அயல்நாடு
ஆனந்த வாழ்வில்.

ஏன் இந்த 
முரண்பாடு?

உத்தம
கேள்விகளுக்கு,
இன்று, 
சத்தியமாய்
பதில் இல்லை.!

No comments:

Post a Comment

comment post plus and minus