7/20/18

அன்பே ! தூய அன்பே !

இன்று உங்களுடன் பகிர்ந்து கொள்ள
 விரும்பும் விஷயம்............. அன்பைக் குறித்தே.

 உண்மை அன்பு உயர்ந்த அன்பு மாசற்ற அன்பு மாறாத அன்பு சுயநலம் இல்லா அன்பு என , நல்ல, பண்புள்ள, மனித நேயம் கொண்ட மனிதனுக்கே உரிய குணங்களாகும்

இவை. என் வேதம் எனக்கு கற்றுக் கொடுத்தும், நல்ல பண்பு என
வாழ்வின் நெறிமுறை என, சொல்லித் தந்ததும்
இந்த அன்பைப் பற்றித் தான்.
 வேதம் சொல்கிறது, 'உன் விரோதியையும் நேசி ' என்று

 சிநேகிதனை நேசித்தால் அதனால் என்ன பயன்......?
 பரஸ்பரம் பகிர்ந்து கொள்வது ஒரு பண்டமாற்று முறை,
 இதில் என்ன மேன்மை இருக்கும்?
 நீ கொடுத்தாய், நானும் கொடுக்கிறேன்,
finished, The deal is over,     But.......

 திருப்பித் தருவார்கள், என்ற எதிர்பார்ப்பு
இல்லாத அன்பே அனைத்துக்கும் மேலான தூய அன்பு!

 இங்கே ஒவ்வொரு அன்பை பற்றியும் நினைவு கூறுவோமா ?

 உண்மை அன்பு 

 மன ஆழத்தில் இருந்து வருவது இந்த அன்பு.
 இதில் வேஷம் இருக்காது.
உண்மை நேசம் இருக்கும்.
காரியம் சாதித்துக் கொள்ள அல்ல...
வெறுக்கும் இதயத்தையும் இது நேசிக்கும்.
 உயர்ந்த உதாரணம்.; அன்னையின் அன்பு.!

 உயர்ந்த அன்பு.! 

 கண்டும் காண்காமல் போகும் மனிதரையும்
கூப்பிட்டு நலம் விசாரிக்கும் அன்பு.
 கரிசனமாக காரியங்கள் பற்றி கேட்கும் அன்பு.
 இளைத்துப் போனாய்,  கறுத்துப் போனாய்..., என
 ஆதங்கம் கொள்ளும் அன்பு.
 ஏதும் உதவிகள் வேண்டுமா? என்று
 அக்கறையுடன் கேட்கும் அன்பு...
 சுட்டிக்காட்ட ஒரு உதாரணம்,.
 
தந்தையின் அன்பு..!

மாசற்ற அன்பு. 

உள்ளொன்று வைத்து புறமொன்று பேசாத அன்பு. யாரிடமும் நம்மை விட்டுக்கொடுக்காத அன்பு. கடிந்து கொள்வதும் புத்தி 
சொல்வதுமான அக்கறை கொண்ட
 இந்த அன்புதான் மாசற்ற அன்பு.

 மாறாத அன்பு. 

எவ்வளவு காலம் பேசாமல், காணாமல் இருந்தாலும்,
 நிறைந்து இருக்கும் நேசம் ,
மேன்மை மாறாமல்
இருக்கும் குணம் இந்த அன்பு.. 

சுயநலம் இல்லா அன்பு.

 இந்த அன்பை,  தன் நலம் கருதா அன்பு,
என்றும் கூறலாம். தனக்கு தனக்கென,'
என்று நினைக்காமல்,
எந்த நலமும் எதிர் பார்க்காமல்,
மற்றவர்களுக்காக எல்லாவற்றையும்
 விட்டுத் தரு்ம்  அன்பு.

 இப்படிப்பட்ட அன்பு
ஒவ்வொரு இதயத்திலும் இருந்தால்
பிரச்சினைகள், பிரிவினைகள் என்பன
 எந்த உறவுகளுக்குள்ளும்
 எட்டிப் பார்க்குமா ?

 நண்பர்களே !
 சிந்திப்போம்... செயலாற்றுவோம்..!

No comments:

Post a Comment

comment post plus and minus