7/21/18

Are You Ready......?


கல்லுக்குள்ளும்
   ஈரம் இருக்கலாம் .
     கண்ணீரைக் கண்டு
        கருணை பிறக்கலாம் .

ஆனந்த 
   முகங்களை பார்த்து,
      மன ஆவிக்குள்
         அமைதி உதிக்கலாம் .

காலத்தின் ஏடுகளை
   புரட்டலாம்,
      கற்பனை சிறகுகள்
         விரிக்கலாம்.

கனவுலகில் 
   சஞ்சரித்து ,புதிய 
     கவிதையினால் 
        காவியம் படைக்கலாம் .

அண்டை அயலுடன்
    கை குலுக்கலாம்.
      சண்டை சச்சரவு
        மறந்து போகலாம் .

ஆறறிவு மாந்தர்
   மத்தியில் அன்பு,
     ஆதவனின் கதிர்கள்
        உதிக்கலாம் .

நானிலத்தில்
   போர்கள் ஓயலாம் .
      நாடுகள் ஒற்றுமையை
        தழுவலாம் .

பாரெங்கும் சமாதான
   மலர் பூத்து,
     எங்கும் பாசத்தின்
        எல்லை காணலாம் .



             are you ready...!?

No comments:

Post a Comment

comment post plus and minus