7/21/18

பெண்மையை வாழ்த்துகிறேன்


பெண்ணே !

உன்னை 

பூ என்று சொல்லாதே, 

வாடிப் போவாய்.

புயல் என்று 

சொல்லாதே ,

கடந்து போவாய்.

நதி என்று 

சொல்லாதே ,

ஓடிப் போவாய் .

நாணல் என்றும் 

சொல்லாதே, தலை 

கவிழ்ந்து போவாய் .

பின்பு எதற்கு 

ஒப்பிடுவது 

என்கிறாயா ..?

உனக்கு 

ஒப்பானது 

ஒன்றுமில்லை .

உன்னை 

பெண் 

என்றே சொல் .

உனக்குள் இருக்கும் 

தகுதிகள் 

ஆயிரம் என்று ,

இந்த 

பூவுலகு 

அறியும் .

                                                                        புனைப்
                                                                     பெயர்கள்
                                                                உனக்கெதற்கு ..?

புதுமை 

படைப்பு நீ!


உறவுகளின்

பிறப்பிடம் நீ !


இந்த பூமியின் 

வழித்தடம் நீ !


பெண்மையே 

நீ வாழ்க !

No comments:

Post a Comment

comment post plus and minus