7/28/18

வானின் போர்.!


வானக் களத்தில்  
போர் நடந்து,

எங்கும் ஒரே 
மேகப் புழுதி ,


உலைக் களத்தின்
நெருப்பாய்,

பகலில் பற்ற வைத்த 

சூரிய அடுப்பின் ,

சாம்பல் கூட 
குருதியின் சிவப்பாய்,


ஏன் வானமே !

நீயும் போர் 
செய்யக்

கற்றுக் 
கொண்டாயோ ,


எங்கள் பொல்லாத 
பூமியைப் பார்த்து!?

No comments:

Post a Comment

comment post plus and minus