7/21/18

ஆனந்தப் பயணம்.!வானமாய் நீ 
நீல வண்ணமாய் நான்.


நதியாய் நீ 
ஆடும் அலையாய் நான்.

வெள்ளமாய் நீ 
வெள்ளி நுரையாய் நான்.


வெண் பனியாய் நீ 
தாங்கும் புற்களாய் நான்.


என் இதயமே.!

நீயும் நானும் 
நிலவும் மேகமாய்,


நீங்கா 
நெடுந்தூரப் பயணம் , 

வாழ்வின் எல்லை நோக்கி....சுயசரிதம் எழுதி வை, 
உன் சுவர் மீதெங்கும்,

நாளைய சந்ததி, 
இதை காண 

மாட்டார்கள் 

என்றாலும்,

நமது அன்பின் 
பிணைப்பினை 


நாம் வாசித்து 

மகிழ்ந்திருக்க.

அழகாக எழுதி வை,  
நாம் மட்டும் அறிந்த,

நமது அன்பின் 
பாஷையிலே.!

No comments:

Post a Comment

comment post plus and minus