7/27/18

அம்மா..............

   இதயம் மலர்ந்தேன் ,
இமைகள் விரித்தேன் ,
   மகிழ்ந்து சிரித்தேன் ,
மழலை பேசினேன் ,    
   அம்மா! உன்னை
      கண்ட போது .

   அழுகை சுமந்தேன் ,
ஆறுதல் தேடினேன் ,
   மனதில் பேசினேன் ,
மறுபடி கான ஏங்கினேன் ,
   அம்மா! உன்னை
     நினைத்த போது.

   விம்மல் வெடித்தேன் ,
வேதனை அடைந்தேன் ,
   உள்ளம் சோர்ந்தேன் ,
உருகி மெலிந்தேன் ,
   அம்மா! நீ 
     நோயுற்ற போது.

  கண்ணீர் சொரிந்தேன் ,
கதறி அழுதேன் ,
  வாழ்க்கை வெறுத்தேன் ,
வாடிச் சரிந்தேன் ,
  அம்மா! உன்னை
    இழந்த போது.

No comments:

Post a Comment

comment post plus and minus