7/20/18

கவிதை விடியல்..........

  


 மழை காற்று படையெடுக்க
மார்கழிச் சாரல் மாலை தொடுக்க,
    வெண்ணிலவு குடை பிடிக்க
புல்வெளிப் பனி நீர் கண் விழிக்கும். 

விடியல்  விரைந்து வந்து
   இரவுக்கு விடை கொடுக்க,
விடாப்பிடியாய் குயிலோசை
   விழிகளை திறக்க வைக்கும்.

மகிழம்பூவும் இதழ் விரித்து
   மயக்கும் மணம் வீசி
உளம் முழுதும் உற்சாகத்தை
   உவகையாய் தெளித்து வைக்கும்

வைகறையும் சோம்பல் முறித்து
   வழி எங்கும் ஒளி விரிக்க
ஒய்யாரமாய் கவிதை விடியல்
   ஓடி வந்தென்னைத் தழுவிக் கொள்ளும்

No comments:

Post a Comment

comment post plus and minus