7/18/18

போற்றுவோம்...........



1. எதை போற்றுவது?
2. அதை எப்படிப் போற்றுவது?
3. என்ன காரணம் சொல்லி   போற்றுவது?

எதை போற்றுவது ?

a.  நம்மை.....?
b.  நம் வாழ்வை......?
c.  இந்த பூமியை......?

ஆம்! முதலில் நாம்
இந்த பூமியைத்தான் போற்ற வேண்டும். 

மனித இனம்  வாழ முடிந்த, வாழக்கூடிய, 
ஒரே இடம் இந்த பூமிதான்.
 நீர், காற்று, ஆகாரம், ஆதாரம் எல்லாம் 
இந்த பூமியில் இருந்து தான் 
நாம் பெற்றுக் கொள்கிறோம். 
இவை அனைத்தும்  மனிதன் உயிர்வாழ, 
வாழ்வதற்கு , மிக மிக அவசியம். 
இதில் ஒன்று குறைந்தாலும் அல்லது 
இல்லாமல் போனாலும் 
நம் வாழ்க்கை என்பது 
கேள்வி குறிதான்.

எப்படி போற்றுவது?

கண்ணே' மணியே' கற்கண்டே' 
எனதுயிர் பூமியே! என்றெல்லாமா? 
இல்லை, இல்லவே இல்லை. 
வாய்மொழியாய் போற்றுவது 
போற்றுதல் ஆகுமா?  
இந்த பூமி இதனால் 
நன்மைகளை பெற்றுக் கொள்ளுமா? 

அப்புறம் எப்படித்தான் போற்றுவது?

Talk less, Work more, என்ற பொன்மொழியின் வழியாகத் தான்.

அது எப்படி? 

இந்த பூமி, மனிதன் தோன்றுவதற்கு முன்பு 
எப்படி இருந்திருக்கும்?
கொஞ்சம் கற்பனை செய்து பார்ப்போமா?
குப்பை கூளம் இல்லாத, மாசு புகையில்லாத,
வியாதியின் தொற்று ஏதும் இல்லாத 
அழகிய, ஆரோக்கியம் நிறைந்த 
நந்தவனமாக இருந்திருக்கும் அல்லவா. 
இந்த அழகிய அமைப்பை கெடுத்தது யார்?

நாம், நாமேதான். 

கெடுத்த நாம் தானே 
அதை சரி செய்ய வேண்டும்!

அதுதானே நீதி! 

இனி இந்த பூமியை 
ஒரு குப்பை கிடங்காக 
ஆகாமல் பார்த்துக் கொள்வோம். 
காத்துக்கொள்வோம்.

என்ன காரணம் சொல்லி போற்றுவது?

"என்னை இங்கு உருவாக்கி 
எல்லா நன்மைகளும் கிடைக்கச் செய்த 
எனது அன்னை பூமியே ! 
உன்னை இனி நான் 
கெட்டுப்போக விட்டு விட மாட்டேன்.

என் தாகம் தீர்த்து 
நா வறண்டு நான் இறந்துவிடாமல் 
என்னை அன்பாய் காத்து கொண்ட 
அருமை பூமியே! 
உனது உயிர் நீரை இனி நான் 
மாசு படுத்த மாட்டேன்.

என் சுவாசத்தில் ஆரோக்கியம் 
இருக்கும் படி செய்து 
என் ஆயுள் நீடிக்கச் 
செய்த அன்பு பூமியே! 
உன் காற்று மாசடைந்து போக  
இனி நான் அனுமதிக்கவே மாட்டேன்.

என் அழகு பூமியே
உன் அழகு கெடாமல் 
பார்த்துக்கொள்வேன்.
அமைதி கெடாமல் 
காத்துக் கொள்வேன்." !
என்று .........

உறுதிமொழி ஏற்போம், 
இந்த உறுதிமொழியை, 
உணர்வோடு, 
செயலாக மாற்றுவோம். 

நமது வாழ்விடமாகிய 
இந்த பூமியை பத்திரமாக
 பார்த்துக்கொள்வோம். 

வாழ்க வையகம்
வாழ்க மானுடம்]
வாழ்க வாழ்கவே!

No comments:

Post a Comment

comment post plus and minus