recent

Popular Posts

Joyful Harvest
Heart Is Talking.......
Is There Anybody.....?

என் உயிரின் உயிரே......!

என்னுடனே பிறந்து
  என்னுடனே வளர்ந்து
    என்னுடனே வாழ்ந்து
      என்னுடனே மறையப்
        போகும் ,என் இதயமே!

என் அன்பு நீ,
  என் அறிவு நீ,
    என் ஆனந்தம் நீ ,
      எனதுயிரின்
        அழுகையும் நீயே !

என் பிறப்பில் இருந்தாய்,
  என் பிரியத்தில் இருந்தாய்,
    என் உறவில் இருந்தாய் ,
      நாளை எனது
        உயிர்ப்பிலும் இருப்பாய் !

நமக்குள் ரகசியங்கள் ஆயிரம்,
  அதில் ரசனைகள் ஆயிரம் ,
    எத்தனை எண்ணங்கள்
      தோன்றியும், நாம்
         எல்லை மீறியதில்லை !

நான் தான் நீ ,நீதான் நான்
  இதில் நாடகங்கள் இல்லை !
    எனக்கு இருக்கும்
      ஒரே தோழி நீ ,இந்த
         உறவில் களங்கமில்லை !

உயிர் துடிப்பு உறங்கும்போது ,
  நிச்சயம் நாமும்
    உறங்கியிருப்போம் !
      அதுவரை ,
        வாழ்ந்திருப்போம்,..

வாச மலர்கள் போல !

No comments:

comment post plus and minus